Description
உலகப் படைப்புக்களில் உயர்ந்த படைப்பு பெண்ணே. அனைத்து உயிர்களையும் உண்டாக்குவதும் காப்பாற்றுவதும் உயிர்ப்பிப்பதும் பெண்ணே. “அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் பொருத்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண் அவளே ஆக்கலும் காத்தலுக்கான ஆதித் தொன்மத்தாய் வடிவில் உள்ளாள்
‘சக்தி’ மகத்தான ஆற்றல் படைத்த பெண் தெய்வம் என்று இந்து மத வழிபாடு தெரிவிக்கிறது மனைவியை “மனையறத்தின் வேர்” என்று சேக்கிழார் புகழ்ந்துள்ளார். அதனால்தான் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று வள்ளுவரும் வினவுகிறார் .
பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்துக் காரைக்காலம்மையார் போன்றவர்களையும் சங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது, பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது. பெண்பாற் புலவர்கள் சங்க காலத்திலேயே கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு..இத்தகைய சிறப்பு மிக்க பெண்களின் வீரம் பற்றி ஆராயும் நோக்கில் இக்கவிதை தொகுப்பு அமைந்துள்ளது.
எமது அறிவிப்பையும் அழைப்பையும் ஏற்று பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் தமிழ் ஆர்வலர்கள் ,முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், பள்ளி மாணவ மாணவிகள் எனப் பலர் பெண்ணின் வீரம் குறித்த கவிதைகளை வழங்கி சிறப்பித்துள்ளனர் அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
- முனைவர் சி. சுகன்யா
Reviews
There are no reviews yet.