From the Heart of Mrs. Subha Ravisanker to Mrs. Vasantha – A Mother’s Day Tribute


அம்மா. இந்த வார்த்தையை சொல்லும்பொழுதே மனதிற்குள் ஒரு உற்சாகம். எல்லோருடைய வாழ்க்கையிலும் அம்மா ஒரு முக்கிய இடத்தை பிடித்திருப்பார். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எல்லாமே என் அம்மா தான். இன்றைய சமுதாயத்தில், ஒரு பேச்சாளராக, முக்கிய நபராக நான் வளம் வருவதற்கு எனது அம்மா தான் முக்கிய காரணம். நான் கல்லூரியில் படித்த காலத்தில், எனது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக, படிப்பை தொடர முடியாத நிலையில் எங்களுடைய சொந்த ஊருக்கே( திருநெல்வேலி) எல்லோரும் சென்று விட்டோம். அந்த சமயத்தில் எனது தாய், மார்பக புற்றுநோய் ஆபரேஷன் செய்து இருந்தார். வீட்டில் நான் தான் கடைசி பெண். நன்றாக படிப்பேன். கல்லூரி இறுதி ஆண்டு. என் குடும்பத்தார் அனைவருடைய எதிர்ப்பையும் தாண்டி, தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாது,என்னை படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, சேலத்தில் நான் படித்த கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து எனது குடும்ப சூழ்நிலையை கூறி, விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடும் செய்து என்னை படிக்க வைத்தார். நிறைய நாட்கள் நான் கல்லூரிக்கு விடுமுறை எடுத்திருந்த போதிலும், எனது தாயின் அன்பு வேண்டுகோளுக்கு இறங்கி, கல்லூரி நிர்வாகம் என்னை கல்லூரியில் சேர்த்துக் கொண்டது. தேர்வு எழுத அனுமதியும் அளித்தது. இன்று நான் தமிழில் முனைவர் பட்டம் பெற்று இருக்கிறேன். அன்று என்னுடைய அம்மா முயற்சி எடுத்து என்னை படிக்க வைத்திருக்காமல் இருந்தால், இன்று என் பெயருக்கு பின்னால் இத்தனை பட்டங்கள் வந்திருக்காது. என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் என் தாய் தான் இருக்கிறார். இன்னொரு பிறவி இருந்தால், மீண்டும் இந்த தாய் வயிற்றிலேயே பிறக்க வேண்டும் என்று இறைவனை கேட்பேன். அம்மா நீ நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ்க வளமுடன்.
Comments (0)